திருநெல்வேலி கோட்டத்துக்குள்பட்ட கிராம நிர்வாக அலுவலர் இடமாறுதலுக்கான கலந்தாய்வில் 120 பேருக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி கோட்டத்துக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில், மானூர், திருவேங்கடம் வட்டங்களில் 188 கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.
"அ' பிரிவு கிராமங்களில் ஓராண்டு பணியாற்றியவர்களுக்கும், "ஆ' பிரிவு கிராமங்களில் மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கும் சார்- ஆட்சியர் மணீஷ் நாராணவரே தலைமையில் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன்படி 5 வட்டங்களைச் சேர்ந்த 113 பேருக்கு வட்டங்களுக்குள்ளேயும், 7 பேருக்கு வட்டம் விட்டு வட்டத்துக்கும் என மொத்தம் 120 பேருக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.