திருநெல்வேலி

கடையத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

28th Aug 2019 07:33 AM

ADVERTISEMENT

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கடையம் வட்டார வள மையம் சார்பில் கடையம் ஒன்றியத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
கடையம் கல்யாணிபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற முகாமை சேரன்மகாதேவி மாவட்டக் கல்வி அலுவலர் சுடலை தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். முகாமில், கண் மருத்துவர், கண் பரிசோதகர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், பேச்சுத்திறன் மருத்துவர், எலும்பு மூட்டு மருத்துவர் மற்றும் மனநல மருத்துவர்கள் 122 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிகிச்சைஅளித்தனர்.
நிகழ்ச்சியில், வட்டாரக் கல்வி அலுவலர்கள் அ. ஜான்பிரிட்டோ, மகேஸ்வரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ச. உமாராணி, வட்டார ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT