திருநெல்வேலி

உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு: சுரண்டையில் சிறப்பு முகாம்

28th Aug 2019 07:35 AM

ADVERTISEMENT

சுரண்டையில் உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வியாபாரிகள் சங்கத் தலைவர் காமராஜ் தலைமை வகித்தார். உணவக உரிமையாளர் சங்கத் தலைவர் துரை, நுகர்பொருள் விநியோகிப்பாளர்கள் சங்கத் தலைவர் சுடலைகாசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் அபுல்கலாம் ஆசாத் முகாமை தொடங்கிவைத்துப் பேசினார். கீழப்பாவூர் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் விளக்கவுரையாற்றினார்.
முகாமில், ஓராண்டுக்குள் ரூ.12 லட்சத்திற்குள் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யும் வணிகர்களுக்கு ரூ.100 மட்டும் கட்டணம் பெற்றுக்கொண்டு முகாமிலேயே பதிவுச் சான்று வழங்கப்பட்டது.
இதில், வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் முத்தையா, பொருளாளர் தனபால், நடராஜன், அழகுசுந்தரம், ரத்தினசாமி, கடற்கரை, சுப்பிரமணியன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT