திருநெல்வேலியில் இரவு நேர இட்லி கடை உரிமையாளருக்கு வெட்டு விழுந்தது.
திருநெல்வேலி சந்திப்பு சி.என்.கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுபாண்டி (50). இவர், அப்பகுதியில் இரவு நேர இட்லி கடை நடத்தி வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு கடைக்கு வந்த சிலர், அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் கடையை சூறையாடிய அவர்கள், அழகுபாண்டியை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் லேசான காயத்துடன் தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப் பதிந்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.