திருநெல்வேலி

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி சங்கரன்கோவிலில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

27th Aug 2019 08:33 AM

ADVERTISEMENT

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு பொதுமக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கரன்கோவிலில் துண்டறிக்கை விநியோகித்தனர்.
2019-ம் ஆண்டிற்கான ஊதிய உயர்வை தமிழக அரசு வழங்கியும், ஊழியர்களுக்கு அதை வழங்காத தனியார் நிறுவனத்தை கண்டித்து, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக தங்களின் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில், சங்கரன்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனை வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்த துண்டறிக்கைகளை விநியோகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்க நெல்லை மாவட்ட பொறுப்பாளர் வனராஜ், மாவட்டத் தலைவர் சுடலைகுமார், மாவட்டச் செயலாளர் வெள்ளத்துரை, மாவட்ட பொருளாளர் வேல்முருகன், நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, செல்வகுமார், கனகராஜ், ராஜ்குமார், டேவிட்செல்வராஜ், கணேசன், வீரகுரு, கற்பகம்மாள், பொன்னுசாமி, கருப்பசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT