திருநெல்வேலி

முனைஞ்சிபட்டியில் விழிப்புணர்வு கருத்தரங்கு

27th Aug 2019 08:31 AM

ADVERTISEMENT

முனைஞ்சிபட்டி அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வுக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு ஆசிரிய பயிற்சி நிறுவன முதல்வர் அன்டோ பூபாலராயன் தலைமை வகித்தார். துணை முதல்வர் எஸ்தர் ராணி, நான்குநேரி வட்டார மருத்துவம்சாரா சுகாதார மேற்பார்வையாளர் செந்தில் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலக துணை இயக்குநர் முத்துராமலிங்கம் சிறப்புரை ஆற்றினார். உலக மக்கள் தொகை பற்றிய மாணவிகளின் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு  நான்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன் பரிசுகள் வழங்கினார். முனைஞ்சிப்பட்டி சுகாதார மைய செவிலியர் ரேவதி நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT