கடலூர் அருகே பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
கடலூர் செம்மண்டலத்தைச் சேர்ந்த ராஜ் மனைவி தனலட்சுமி (70). இவர், ஞாயிற்றுக்கிழமை கடலூர் - விழுப்புரம் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாகச் சென்ற பைக் அவர் மீது மோதியது. இதில், பலத்த காயமுற்ற தனலட்சுமி கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகள் ச.ஞானசுந்தரி அளித்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.