சங்கரன்கோவில் அருகே நிலத் தகராறு தொடர்பாக கூலித் தொழிலாளியைத் தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் அருகே சீவல்ராயனேந்தலைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் மாரிச்சாமி (30), கூலித் தொழிலாளி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் மணிகண்டன் (35), பூசன் மகன் சீனிப்பாண்டியன் (41) ஆகியோருக்குமிடையே பொது நடைபாதை தொடர்பாக முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில், கடந்த இருதினங்களுக்கு முன்பு வீட்டு முன் மாரிச்சாமி நின்றுகொண்டிருந்தபோது, மணிகண்டன் டார்ச் லைட்டை அவர்மீது அடித்தாராம். இதை மாரிச்சாமி தட்டிக்கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மாரிச்சாமியை மணிகண்டன், சீனிபாண்டியன் உள்ளிட்ட 3 பேர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மாரிச்சாமி அளித்த புகாரின் பேரில், சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய போலீஸார் மணிகண்டன், சீனிப்பாண்டியன் ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.