மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறை தேர்வில், தென்காசி கொடிக்குறிச்சி ஸ்ரீராம் நல்லமணியாதவா கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் பெற்றார்.
இக்கல்லூரி மாணவி மு. மெஹ்தாபாஸ்லின் இளங்கலை ஆங்கிலப் பிரிவில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். பதக்கம் பெற்ற மாணவிக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். மாணவி மெஹ்தாபாஸ்லினை, கல்வி நிறுவனங்களின் தாளாளர் என். மணிமாறன், செயலர் பத்மாவதி மணிமாறன், நிர்வாக அதிகாரி எம். பத்மாவதி, கல்லூரி முதல்வர் அ. பீர்முகைதீன், மருந்தியல் கல்லூரி முதல்வர் முத்துகுமார், கல்வியியல் கல்லூரி முதல்வர் அந்தோணிசகாயரூபன், துணை முதல்வர் ராமர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.