நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அம்பாசமுத்திரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு, அதன் ஒன்றியச் செயலர் ந.பீமாராவ் தலைமை வகித்தார். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் மே.சுரேஷ், கடையம் ஒன்றியச் செயலர் ஆதித்தமிழன் அன்பழகன், நகரச் செயலர்கள் சூர்யா, பாஸ்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில துணைச் செயலர் எம்.சி.கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.
சங்கரன்கோவில்: தேரடித்திடலில் மக்கள்தேசம் கட்சியின் மாவட்டச் செயலர் தம்பிசேவியர், புரட்சி பாரதம் தென்மண்டலச் செயலர் மன்னார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொருளாளர் ஆனந்த் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடையநல்லூர்: கடையநல்லூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செய்தித்தொடர்பாளர் இசக்கி பாண்டியன் தலைமையில், மறியலுக்கு முயன்ற ஒன்றியச் செயலர் மூர்த்தி, துணைச் செயலர்கள் ராமசாமி, ராஜீவ், ஒன்றிய பொருளாளர் மகேஷ், நிர்வாகிகள் ஜெகன், தீபக், மகேந்திரன், குமார் உள்ளிட்ட 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.
வள்ளியூர்: அம்பேத்கர் சிலை அருகே வள்ளியூர்- நாகர்கோவில் சாலையில் தெற்கு மாவட்டச் செயலர் சுந்தர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 45 பேரை ஏ.எஸ்.பி.ஹரிகிரண்பிரசாத் தலைமையில் ஆய்வாளர் அருள் மற்றும் போலீஸார் கைது செய்தனர்.
களக்காடு: வட்டார தாழ்த்தப்பட்டோர் சீர்திருத்த சங்கத்தின் தலைவர் எம்.எஸ். சுப்பையா தலைமையில் அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலர் ஜாண்சன், துணைத் தலைவர் சந்திரசேகர், மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.நெல்சன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நான்குனேரி வட்டக்குழுச் செயலர் க. முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய அமைப்பாளர் சுந்தர், ஆதித்தமிழர் பேரவை ஒன்றியச் செயலர் அன்புதோழன், தாழ்த்தப்பட்டோர் சங்க முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம், மக்கள் தேசம் நகரச் செயலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.