திருநெல்வேலி

மேலநத்தம் ஆதிபராசக்தி மன்றத்தில்  நாளை கலச விளக்கு வேள்வி தொடக்கம்

23rd Aug 2019 09:57 AM

ADVERTISEMENT

மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் கலச விளக்கு வேள்வி விழா சனிக்கிழமை (ஆக.24) தொடங்குகிறது.
மேலநத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் 16 ஆவது ஆண்டு கலச விளக்கு வேள்வி மற்றும் ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு விழா மேலநத்தம் அக்னீஸ்வரர், கோமதி அம்பாள் சன்னதியில் சனிக்கிழமை (ஆக.24) தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெறுகிறது. 
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (ஆக.25) காலை 7.30 மணிக்கு ஆடிப்பூர கஞ்சி வார்ப்பு மற்றும் மேலநத்தம் வீதிகளில் முளைப்பாரி, அக்னி சட்டி ஊர்வலம் நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.  ஏற்பாடுகளை, வேள்வி குழுத் தலைவர் ராமையா,  மாவட்டத் தலைவர் திருமலை,  மேலநத்தம் மன்றத் தலைவி சண்முகத்தாய், பொருளாளர் சுப்புலட்சுமி, செயலர் பொன்னம்மாள் மற்றும் மன்றப் பொறுப்பாளர்கள், செவ்வாடை பக்தர்கள் செய்துவருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT