திருநெல்வேலி

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை பதிவு

23rd Aug 2019 07:15 AM

ADVERTISEMENT

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் தனித்துவ அடையாள அட்டைக்கான(யுடிஐடி)பதிவு முகாம் வாசுதேவநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
 இம்முகாமுக்கு, மகாத்மா காந்திஜி சேவா சங்கத் தலைவர் கு. தவமணி தலைமை வகித்தார். வாசுதேவநல்லூர் ஒன்றிய கிராமங்களைச் சேர்ந்த அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனர். அதில், 620 பேரின் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு அடையாள அட்டை பெற பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பி. சாந்தி குளோரி எமரால்ட் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். 
நிகழ்ச்சியில்,  சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் த. சங்கர சுப்பிரமணியன், ஆ. சாந்தி, செ. முத்தம்மாள், டி. ராஜா, பெரியசாமி, முருகன், இசக்கிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT