திருநெல்வேலி

நெல்லை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம்

23rd Aug 2019 07:17 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை வியாழக்கிழமை பிறந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தெப்பக்குளத் தெருவைச் சேர்ந்தவர் சுடலை. இவரது மனைவி மாரியம்மாள் (28). கர்ப்பிணியான இவர், வியாழக்கிழமை மாலை கடையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக திருநெல்வேலி சந்திப்பில் இருந்து செங்கோட்டை பயணிகள் ரயிலில் ஏறும்போது பிரசவ வலி ஏற்பட்டதாம். 
அப்போது, அருகில் நின்ற பயணிகள் மாரியம்மாளை ரயிலில் இருந்து இறக்கி 4 ஆவது நடைமேடையில் அமர வைத்தனர். தகவலறிந்த ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளர்  ஜூலியட், போலீஸார் ராதா, விஜயசாந்தி ஆகியோர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், ஆம்புலன்சுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரியம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயையும், சேயையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT