திருநெல்வேலி

திருவனந்தபுரத்தில் ஆக.29இல் திருக்குறள் கருத்தரங்கம்

23rd Aug 2019 09:56 AM

ADVERTISEMENT

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் திருக்குறள் கருத்தரங்கம் இம் மாதம் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கேரள கல்லூரி பல்கலைக்கழக பணி நிறை தமிழ்ப் பேராசிரியர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
திருவனந்தபுரம் சைவப் பிரகாச சபை, கேரள மாநில கல்லூரி பல்கலைக்கழக பணிநிறை தமிழ்ப் பேராசிரியர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் திருக்குறள் கருத்தரங்கு திருவனந்தபுரம் கிள்ளிபாலம் சந்திப்பு பகுதியில் உள்ள சைவப் பிரகாச சபை சமுதாய அரங்கில் இம் மாதம் 29 ஆம் தேதி காலை 10 முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. 
இக் கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் ஆய்வுரை நிகழ்த்த உள்ளனர்.  இதில் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி தமிழாசிரியர்கள் பங்கெடுக்கலாம். முன்பதிவு செய்யும் ஆய்வாளர்கள், முதுநிலையினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். பதிவுக்கட்டணம் கிடையாது. மதிய உணவு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்த விவரங்களுக்கு முனைவர் எம்.எம்.மீரான்பிள்ளையை 9495011317 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT