திருநெல்வேலி

கீழப்பாவூர் விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நாளை தொடக்கம்

23rd Aug 2019 07:17 AM

ADVERTISEMENT

கீழப்பாவூர் 2ஆம் தெருவில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா சனிக்கிழமை (ஆக.24) தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. 
தினந்தோறும்  காலை கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் சாயரட்சை, தீபாராதனை ஆகியவை நடைபெறும். இரவு 7 மணிக்கு சுவாமிக்கு மாவு, மஞ்சள், விபூதி, சந்தனம், வெண்ணெய், மலர், பழங்கள், காய்கனி போன்ற பொருள்களால் தினந்தோறும் வெவ்வேறு அலங்காரம், 1008 அர்ச்சனை, தீபாராதனை நடைபெறுகிறது.
விநாயகர் சதுர்த்தி தினமான செப்.2 ஆம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், கும்ப ஜெபம், விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். இரவு விநாயகருக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெறுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT