திருநெல்வேலி

அம்பையில் 2 இளைஞர்கள் குண்டர் சட்டத்தில் கைது

23rd Aug 2019 07:18 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள சாட்டுப்பத்து கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் மகன் கணேசன் (27),  கருத்தப்பாண்டி மகன் முகைதீன் நாகராஜ் (எ) நாகராஜ் (30). இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை, மணல் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள்  அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் ஆகிய  காவல் நிலையங்களில்  உள்ளன. இதையடுத்து, இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி அருண் குமார், ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார். அதன்பேரில், ஆட்சியர் ஷில்பா பிரபாகர் பிறப்பித்த உத்தரவுப்படி, சதீஷ் கணேசன், முகைதீன் நாகராஜ் ஆகியோர் மீது  குண்டர் சட்டத்தின் கீழ் காவல் ஆய்வாளர் விஜயகுமார் வழக்குப்பதிந்து, இருவரையும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT