மேலப்பாளையம் கணேசபுரம் சந்தனமாரியம்மன் கோயிலில் ஆடி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஆடி கடைசி வெள்ளிக்கிழமை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை கமிட்டி தலைவர் செல்வராஜ், செயலர் முத்துமணி, பொருளாளர் சடகோபன் ஆகியோர் செய்திருந்தனர்.