கடையம் பகுதியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சா. ஞானதிரவியம் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஞானதிரவியம் எம்.பி., கடையம் வட்டாரத்தில் பாப்பான்குளம், மயிலப்புரம், அடைச்சாணி, ஏ.பி.நாடானூர், செல்லப்பிள்ளையார்குளம், மாதாபுரம் சோதனைச் சாவடி, மேட்டூர், மைலப்புரம், வெய்காலிபட்டி, புங்கம்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, கீழக்கடையம், தெற்கு கடையம், முதலியார்பட்டி, திருமலைப்புரம், பொட்டல்புதூர், கருத்தபிள்ளையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் திறந்த ஜீப்பில் இருந்தவாறு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் உறுதி கூறினார். அவருடன், திமுக ஒன்றியச் செயலர் இரா. குமார், மாவட்ட திமுக மகளிரணி செல்வி சங்குகிருஷ்ணன், இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் சேர்மசெல்வன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி. பி. துரை, மாணவர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் மாரிகுமார், பொருளாளர் துரை, அவைத் தலைவர் ஷாஜகான், ஆழ்வார்குறிச்சி நகரச் செயலர் பொன்ஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.