திருநெல்வேலி

உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் பாளை.யில் சிறப்பு சொற்பொழிவு

18th Aug 2019 05:33 AM

ADVERTISEMENT


ராம்ராஜ் காட்டன் புதிய கிளை திறப்புவிழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் சிறப்பு சொற்பொழிவு  சனிக்கிழமை நடைபெற்றது. 
ராம்ராஜ் காட்டன் புதிய கிளை திறப்பு விழா திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.   திருநெல்வேலி சுதர்சன் பிளாட்டினம் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ஹெச். சிவராமகிருஷ்ணன் புதிய ஷோரூமை திறந்து வைக்கவுள்ளார்.  திருநெல்வேலி செய்யது குழும இயக்குநர் என்.சையது நவாஸ் முதல் விற்பனையை தொடங்கி வைக்கவுள்ளார்.  திருநெல்வேலி புரபஷனல் கூரியர் உரிமையாளர் எஸ்.மேகலிங்கம் முதல் விற்பனையை பெற்றுக் கொள்ளவுள்ளார்.
இதையொட்டி பாளையங்கோட்டையில் உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் உறவுகள் மேம்பட என்ற தலைப்பில் சுகி.சிவம் சொற்பொழிவு சனிக்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு,  திருநெல்வேலிமாநகர காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) எஸ்.சரவணன் தலைமை வகித்தார்.  ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் வரவேற்றார்.  உலக சமுதாய சேவா சங்க திருநெல்வேலி மண்டல தலைவர் ஏ.அண்ணாமலையார், பேராசிரியர் ஜி.டி.கணேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
உறவுகள் மேம்பட என்ற தலைப்பில் சுகி.சிவம் பேசுகையில், குடும்பத்திலும், வேலைபார்க்கும் இடங்களிலும் உறவுகளில் விரிசல் ஏற்படாமல் இருக்க தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் போதனைகளை கடைப்பிடிக்க வேண்டும்.  அகந்தை, அர்த்தமில்லா பேச்சு, குறுகிய மனப்பான்மை, கர்வம், அதிக ஆசை, தவறாக புரிந்து கொள்ளுதல் இவற்றை விட்டொழிக்க வேண்டும் என்றார்.   இதில் உலக சமுதாய சேவா சங்கத்தினர், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT