திருநெல்வேலி

வள்ளியூர் கூட்டுறவு சங்கத்தில் சுதந்திர தின விழா

16th Aug 2019 09:58 AM

ADVERTISEMENT

வள்ளியூரில் இயங்கும்  நான்குனேரி, ராதாபுரம் வட்டார வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு சங்கத் தலைவர் ராதாபுரம் எஸ்.முருகேசன் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் தினேஷ்குமார், மேலாளர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வள்ளியூர் பூங்கா நகர் மற்றும் எஸ்.கே.பி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சங்க நிறுவனர்- தலைவர்காசிப்பழம் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார். 
 தெரு பலகையை அறிவரசு திறந்துவைத்தார். செயலர் சார்லஸ் பெஸ்கி செயல்திட்ட அறிக்கை வாசித்தார்.
 நகர் முழுவதும் கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் முருகேசன் வரவேற்றார். கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.
 பணகுடி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு மருத்துவர் அலெக்ஸாண்டர் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றினார்.  
மருத்துவர்கள் வினோத், பிரீட்டா,  பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் மு.சங்கர், மருந்தாளுநர் வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT