திருநெல்வேலி

முன்னீர்பள்ளம் அருகே விபத்தில் பெண் பலி

16th Aug 2019 10:02 AM

ADVERTISEMENT

முன்னீர்பள்ளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் பெண் வியாழக்கிழமை  உயிரிழந்தார்.
முன்னீர்பள்ளம் அருகேயுள்ள பொன்னாக்குடியைச் சேர்ந்தவர் ஹெர்மஸ் மனைவி ஜோதி(45). இவர்களது மகன் அனிஸ்டன்(18). பாளையங்கோட்டையிலுள்ள கல்லூரியில் படித்து வருகிறார். ஜோதி தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் பொன்னாக்குடி சந்திப்புக்கு சென்றாராம்.
நான்குவழிச் சாலையில் வந்தபோது, திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற கார் மோட்டார் சைகிகள் மீது மோதியதாம். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அனிஸ்டன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT