திருநெல்வேலி

பாளை., அம்பை வட்டங்களில் இன்று அம்மா திட்ட முகாம்

16th Aug 2019 10:00 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் வட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 16)  அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம் அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை வட்டம் சீவலப்பேரி ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் மாலை 5 மணி வரை அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது. 
இந்த முகாமின்போது, இலவச வீட்டுமனைப் பட்டா,  முதியோர் உதவித் தொகை மற்றும் நிறுத்தம் செய்யப்பட்ட முதியோர் உதவித்தொகை மறுபரிசீலனை விண்ணப்பம் உள்பட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்,  உழவர் பாதுகாப்பு அட்டை, நிலத்தாவாக்கள்,  சாலை வசதி, குடிநீர் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT