திருநெல்வேலி

திசையன்விளையில்  சுதந்திர தின அணிவகுப்பு 

16th Aug 2019 09:59 AM

ADVERTISEMENT

திசையன்விளை மாளவியா வித்தியா கேந்திரம் பள்ளியில்  சுதந்திர தினம், பாரத மாதா பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
உவரி, அப்புவிளை, கூடங்குளம், ஆழ்வார்திருநகரி, திசையன்விளையில் இயங்கி வரும் மாளவியா வித்தியா கேந்திரம் பள்ளி
கள் சார்பில் ராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா, பாரதமாதா பூஜை ஆகியவை நடைபெற்றன. இதையொட்டி, மாணவர்கள் தேசத் தலைவர்கள், தியாகிகள், பாரத மாதா வேடமிட்டு மாளவியா பள்ளியில் இருந்து  புறப்பட்டு ஊர்வலமாக விழா நடைபெற்ற பள்ளிக்கு  வந்தனர்.  
இந்நிகழ்ச்சிக்கு, வருமானவரித் துறை இணை ஆணையர் சுரேஷ் தலைமை வகித்தார். மாளவியா வித்தியா கேந்திரம் நிர்வாகிகள் செல்லம்மாள், சரவணசுயம்பு, சேகர், வேலு, ராஜலிங்கம், ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முனைஞ்சிப்பட்டி, இட்டமொழியில்.. 

முனைஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இட்டமொழி புதூர் டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு தலைமையாசிரியை ரோஸ் சுதா தலைமை வகித்தார். காவல் உதவி ஆய்வாளர் துரை கொடி ஏற்றினார். ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இட்டமொழி புதூர் டி.டி.டி.ஏ தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, பள்ளியின் தலைமையாசிரியை விமலாதேவி வயலட் தலைமை வகித்தார். தாளாளர் பாஸ்கர் கனகராஜ் தேசியக்கொடி ஏற்றினார். சபை மன்ற உறுப்பினர் ஜெபசீலன், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஜேக்கப், பள்ளி வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் பால சுந்தரம், ஜெபக்குமார், அருள்ராஜன், ஏசுவடியாள் அம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். உதவி ஆசிரியர் ஜஸ்டின் ஜானி நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT