திருநெல்வேலி

கொடிக்குறிச்சியில் கிராம சபைக் கூட்டம்

16th Aug 2019 09:58 AM

ADVERTISEMENT

கடையநல்லூர் ஒன்றியம்,கொடிக்குறிச்சி ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கடையநல்லூர் வட்டாட்சியர் அழகப்பராஜா பங்கேற்று, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல்,  குடிமராமத்துப் பணிகள், நெகிழி ஒழிப்பு, நீர் மேலாண்மை, மரம் வளர்த்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,இணையவழி சான்றுகள் குறித்த மக்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.
சொக்கம்பட்டி, நயினாரகரம், காசிதர்மம் ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை,   கால்நடைத் துறை, மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT