திருநெல்வேலி மாநகராட்சிக்குச் சொந்தமான ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் சனிக்கிழமை பிடித்த தீயால் புகை மண்டலம் ஏற்பட்டது.
தச்சநல்லுôர் அருகேயுள்ள ராமையன்பட்டியில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இந்தக் குப்பைக்கிடங்கில் சனிக்கிழமை தீப்பிடித்தது. பலத்த காற்று வீசியதால் தீ மளமளவென பிற பகுதிகளுக்கு பரவியதோடு, கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டது. இதனால் திருநெல்வேலி-சங்கரன்கோவில் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமையில் 5 தீயணைப்பு வாகனங்களில் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை பம்பிங் செய்து 8 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.