பாவூர்சத்திரம் முப்புடாதிஅம்மன் கோயிலில் வரலட்சுமி விரதத்தையொட்டி சுமங்கலி பூஜை நடைபெற்றது.
இதில், விரதமிருந்த 306 பெண்கள் சுமங்கலி பூஜை நடத்தினர். இதையொட்டி நெல்லை ஸஹஸ்ர நாம மண்டலியினர், கீழப்பாவூர் ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தினரும் இணைந்து ஸ்ரீலலிதா ஸஹஸ்ர நாம பாராயணம், லலிதா த்ரிசதி அர்ச்சனையை நடத்தினர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதே போல் பாவூர்சத்திரம் மாளவியா வித்யா கேந்திரம் பள்ளியில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் 101 சுமங்கலிகள் கலந்து கொண்டனர்.