திருநெல்வேலி

பாபநாசம் கல்லூரியில் மாணவர்களுக்கான இலக்கியச் சந்திப்பு

11th Aug 2019 05:57 AM

ADVERTISEMENT


விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகம், பொதிகை வாசகர் வட்டம் மற்றும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி ரா.பி.சேதுப்பிள்ளை தமிழ்ப் பேரவை இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் இலக்கியச் சந்திப்பு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு, திருவள்ளுவர் கல்லூரி முதல்வர் எஸ்.சுந்தரம் தலைமை வகித்தார்.  விக்கிரமசிங்கபுரம் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் டி.சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அறம் பிழைத்தோர்க்கு என்ற தலைப்பில் பேசினார். 
நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் பாக்கியமுத்து, இந்துபாலா, வரலெட்சுமி மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், மாணவிகள் உள்பட  பலர் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை வாசகர் வட்ட கெளரவ ஆலோசகர் பேராசிரியர் வல்சகுமார், பொருளாளர் மு.இளங்கோ, நூலக உதவியாளர் கைலாசம் மற்றும் பொதிகை வாசகர் வட்டத்தினர் செய்திருந்தனர்.  தமிழ்த் துறைத் தலைவர் பேராசியர் சிவசங்கரன் வரவேற்றார். விக்கிரமசிங்கபுரம் அரசு கிளை நூலகர் பி.குமார் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT