திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு: 1409 பேர் எழுதினர்

11th Aug 2019 06:00 AM

ADVERTISEMENT


திருநெல்வேலி மாவட்டத்தில்,  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) சனிக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் சேவை தேர்வை 1409 பேர் எழுதினர்.
பேட்டை மதிதா இந்துக்கல்லூரி, பழையபேட்டை ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி நகரம் லிட்டில் ஃபிளவர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, பெருமாள்புரம் சாராள் தக்கர் மகளிர் கல்லூரி, முருகன்குறிச்சி கத்தீட்ரல் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 12 இடங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. 
இந்தத் தேர்வை 3713 பேர் எழுத விண்ணப்பித்திருந்த நிலையில் 1,409 பேர் மட்டும் தேர்வு எழுதினர்.
தேர்வு மையத்தில் விடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும், கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தடையில்லா மின்சாரம், தேர்வு மையங்களுக்கு சீரான பேருந்து இயக்கம் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT