திருநெல்வேலி

சுதந்திர தின விழா: நெல்லையில் நடன ஒத்திகை

11th Aug 2019 05:56 AM

ADVERTISEMENT


சுதந்திர  தினத்தையொட்டி பள்ளி மாணவர்- மாணவியரின் கலைநிகழ்ச்சிக்கான ஒத்திகை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழா பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது. விழாவில் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைப்பார். 
இதில் பள்ளி மாணவர்- மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இதையொட்டி, 6 பள்ளிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்- மாணவியர், நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனர். இதில், துணை ஆட்சியர் மணீஷ் நாரணவரே, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் டைட்டஸ், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT