திருநெல்வேலி

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் வாசகர் வட்டம் தொடக்கம்

11th Aug 2019 05:54 AM

ADVERTISEMENT


பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் வாசகர் வட்டத் தொடக்க விழா  நடைபெற்றது. 
கல்லூரியின் அரசுதவி பெறும் மற்றும் பெறா தமிழ்த்துறையின் சார்பில் நடைபெற்ற மாணவர் வாசகர் வட்டத் தொடக்க விழாவுக்கு,  அரசுதவி பெறா பாடவகுப்புகளின் இயக்குநர் அ. அப்துல் காதர்  தலைமை வகித்தார்.  கல்லூரியின் கலைப்புல முதன்மையர் ச.மகாதேவன் தற்காலத் தமிழ்நாவல்களின் கருவும் உருவும் எனும் தலைப்பில் அறிமுகவுரையாற்றினார்.  கல்லூரியின் கருவூலக் காப்பாளர் ஆ. ஹாமில், மூணாறு அரசுக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ந.ஜிதேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
அரசுதவி பெறா வகுப்புகளின் தமிழ்த் துறைத் தலைவர் மு. சாதிக் அலி வரவேற்றார். கேரள மாநிலம் குமுளியைச் சார்ந்த பாண்டிச்சி நாவலாசிரியர் எழுத்தாளர் அல்லி பாத்திமா, தமிழ்த்துறையின் மாணவர் வாசகர் வட்டத்தின் இந்த ஆண்டுக்கான நிகழ்வைத் தொடங்கிவைத்து பேசினார். 
முதல்அமர்வில் இரண்டாமாண்டு உணவு மற்றும் ஊட்டச்சத்துத்துறை மாணவி ஏ.சுல்பியா, கவிஞர் அம்சப்ரியாவின் கல்விச்சிந்தனைகள் 100  என்ற நூலைத் திறனாய்வு செய்தார்.   இரண்டாம் அமர்வில் இரண்டாமாண்டு தமிழ்இலக்கிய மாணவர் செ. செல்வம், எழுத்தாளர் வண்ணநிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு நாவலைத் திறனாய்வு செய்தார். தமிழ்த்துறை இணைப்பேராசிரியர்  அ.மு.அயூப்கான் நன்றி கூறினார். 
இறுதியில் மாணவர் மாணவிகளின் கேள்விகளுக்கு எழுத்தாளர் அல்லி பாத்திமா பதிலளித்துப் பேசினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT