திருநெல்வேலி

கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வுப் பயிற்சி

11th Aug 2019 05:55 AM

ADVERTISEMENT


திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வுப் பயிற்சி மற்றும் கால்நடைப் பண்ணை இடுபொருள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் ப. டென்சிங் ஞானராஜ்  தலைமை வகித்துப் பேசும்போது, நோய் பரவல், நோய் கண்டறிதல் மற்றும் தடுப்பு முறைகளின் முக்கியத்துவம் பற்றியும், அவற்றில் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு பற்றியும் கூறினார்.
கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஜே. ஜாண்சன் ராஜேஸ்வர் முன்னிலை வகித்தார்.  கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறைத் தலைவர் வி. ரமேஷ் சரவணகுமார் வரவேற்றார். திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் த. ரவிமுருகன் திட்ட விளக்கமளித்தார். தொடந்து, கால்நடை வளர்ப்போர் 100 பேருக்கு இடுபொருள்கள், குடற்புழு நீக்க உபகரணம், கறவை மாடு, வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளுக்கான தாது உப்புக் கலவை, பல்கலைக்கழகம் உருவாக்கிய பண்ணை உபகரணங்கள், மாட்டுத் தீவனம், வேலி  அமைக்கும்  இதர இடுபொருள்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முதன்மை ஆராய்ச்சியாளர் கிருஷ்ணமோகன் ரெட்டி,  இணை ஆராய்ச்சியாளர் க. அன்புகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் ம. செல்லப்பாண்டியன், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கால்நடை விரிவாக்கக் கல்வித் துறைத் தலைவர் வெ. தனசீலன் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT