திருநெல்வேலி

கார் மோதி இளைஞர் பலி

11th Aug 2019 05:59 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே சனிக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
முன்னீர்பள்ளம் அருகேயுள்ள மேலச்செவலைச் சேர்ந்த அருணாசலம் மகன் ராம்குமார் (21). இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். இவர், சனிக்கிழமை காலை வேலை நிமித்தமாக திருநெல்வேலிக்குக்கு பைக்கில் வந்தாராம். சுப்பிரமணியபுரம் அருகே இவரது பைக் மீது, அவ்வழியே வந்த கார் மோதியதாம். இதில் ராம்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். முன்னீர்பள்ளம் போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT