திருநெல்வேலி

ஊர்மேனியழகியான் சாய்பாபா கோயிலில் சிம்மாசனம் பிரதிஷ்டை

11th Aug 2019 05:55 AM

ADVERTISEMENT


கடையநல்லூர் அருகேயுள்ள ஊர்மேனியழகியான் சாய்பாபா கோயிலில் சாய்பாபா அமருவதற்கான சிம்மாசன மேடை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
   2014  ஆம் ஆண்டு செப்.10 ஆம் தேதி இடைகால்-ஊர்மேனியழகியான் சாலையில் சாய்பாபா கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தினமும் 4 நேரம் ஆரத்தி  பூஜையும், வியாழக்கிழமை இரவு அன்னதானமும் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, உபயதாரர்கள் சக்திவேல், இந்துமணி ஆகியோர் சார்பில் சாய்பாபா அமருவதற்கான அலங்கரிக்கப்பட்ட சிம்மாசன மேடை  பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு ஆரத்தி நடைபெற்றது.  ஏற்பாடுகளை,  ஊர்மேனியழகியான் ஸ்ரீ சீரடிசாய்பாபா பொதுநல அறக்கட்டளை நிர்வாகி கதிரேசன்,செயலர் சுப்பிரமணியன், பொன்னம்பலம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT