திருநெல்வேலி

ஆக.14இல் சேரன்மகாதேவியில்மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

11th Aug 2019 05:58 AM

ADVERTISEMENT


சேரன்மகாதேவி கோட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஆக.14) சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக சேரன்மகாதேவி சார்- ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சேரன்மகாதேவி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் சார் ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் 14-ஆம் தேதி  காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. 
எனவே, சேரன்மகாதேவி கோட்டத்துக்குள்பட்ட சேரன்மகாதேவி,  அம்பாசமுத்திரம், நான்குனேரி, ராதாபுரம்,  திசையன்விளை வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT