திருநெல்வேலி

அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மாநாடு

11th Aug 2019 05:53 AM

ADVERTISEMENT


பாவூர்சத்திரம் மற்றும் குற்றாலத்தில் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மாநாடு 3 நாள்கள் நடைபெற்றது. 
 தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது, பாவூர்சத்திரம் சுசிலா மருத்துவமனையில் நடைபெற்ற முதல் நாள் மாநாட்டில் லேப்ரோஸ்கோபி  அறுவை சிகிச்சைகள், சாதாரண முறை அறுவை சிகிச்சைகள் குறித்து அந்தந்த துறைகளில் சிறப்பு பயிற்சி பெற்றவர்களால், செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் 15 நோயாளிகளுக்கு குடல் இறக்கம், குடல்வால்வு, பித்தப்பை கல்,  மார்பக புற்றுநோய், தைராய்டு கட்டி உள்ளிட்ட நோய்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 
அறுவை சிகிச்சையினை சுசிலா மருத்துவமனை மருத்துவர் எஸ்.குணசேகரன்,  பாலாஜி மருத்துவமனை மருத்துவர் த.பாலாஜி, மருத்துவர்கள்  பழனிவேல், மதுபாலா, சுந்தரம், சதாசிவம், ராகேஷ், முகம்மது இப்ராகிம் உள்ளிட்டோர் செய்தனர்.
  இம்மாநாடு தொடர்ந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் குற்றாலத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சியில் அமைப்பின் மாநிலத் தலைவர்   மருதுபாண்டியன்  பேசினார். ஏ.எஸ்.ஐ. துணைத்தலைவர்   ரகுராம், மருத்துவர்கள்  கீதாலட்சுமி, விஜேந்திரன், செந்தில்ஆறுமுகம், பேராசிரியை கமலின்விஜி,  ஐரின், பபிதா மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பேராசிரியர்கள், மாணவ,  மாணவியர் கலந்து கொண்டனர்.  மருத்துர் எஸ்.குணசேகரன் வரவேற்றார்.  மருத்துவர் அலெக்ஸ் நன்றி கூறினார்.
   ஏற்பாடுகளை மருத்துவர் எஸ்.குணசேகரன் தலைமையில் மருத்துவகள் த.பாலாஜி, அலெக்ஸ் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT