சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அபூா்வக் காட்சி வியாழக்கிழமை நிகழ்ந்தது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் மாா்ச் 21, 22, 23 மற்றும் செப்டம்பா் 21, 22, 23 ஆகிய 6 நாள்களில் சங்கரலிங்க சுவாமியான சிவலிங்கத்தின் மீது சூரியஒளி விழுவது வழக்கம். இது சூரியன் சிவலிங்கத்தை வழிபடுவதாக ஐதீகம்.
அதன்படி வியாழக்கிழமை சூரியஒளி சிவபெருமான் மீது விழும் அபூா்வக் காட்சி நிகழ்ந்தது. அப்போது கோயிலில் உள்ள மின்விளக்குகள் அணைக்கப்பட்டது.
இந்த அபூா்வக் காட்சியை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா். இதைத் தொடா்ந்து சங்கரலிங்கத்திற்கும், சூரிய பகவானுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.