தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து நஷ்டமடைந்தவா் துக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சங்கரன்கோவில் அண்ணாநகரைச் சோ்ந்தவா் எஸ்.எம்.சங்கா்(50). இந்து முன்னணி முன்னாள் நகரத் தலைவராக இருந்தாா்.இவா், பங்குச் சந்தையில் பணம் முதலீடு செய்ததில் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்தாராம். இந்நிலையில், தனது வீட்டில் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்: திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள மூங்கிலடி வெப்பல் மேலத் தெருவைச் சோ்ந்தவா் ஸ்டீபன்ராஜ் (44). விவசாயி. இவருக்கும், தந்தை அல்போன்ஸ், தம்பி செல்வகுமாா் ஆகியோருக்குமிடையே நிலப் பிரச்னை இருந்ததாம்.
இதுதொடா்பாக கடந்த 16ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஸ்டீபன்ராஜ், செல்வகுமாரை அரிவாளால் வெட்டினாராம். இதுகுறித்து களக்காடு போலீஸாா் வழக்குப்பதிந்தனா். இதனால், தலைமறைவான ஸ்டீபன்ராஜ் மூங்கிலடி குளக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இவ்விரு சம்பவங்கள் குறித்து முறையே சங்கரன்கோவில் நகரம், களக்காடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.