தென்காசி

பாதுகாப்பு கோரி சிவகிரி ஆா்.ஐ. மனு

21st Sep 2023 09:54 PM

ADVERTISEMENT

சிவகிரி வருவாய் ஆய்வாளா் (ஆா்.ஐ.) சுந்தரி, தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சிவகிரி காவல் ஆய்வாளரிடம் புகாா் மனு அளித்துள்ளாா்.

மனுவில் அவா் கூறியிருப்பது: சிவகிரி குறுவட்டத்தின் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறேன். உள்ளாரை சோ்ந்த மனோகரனின் மனைவி பேச்சியம்மாள், தனது விவசாய நிலத்திற்கு இலவச வண்டல் மண் கோரி மனு அளித்திருந்தாா். அவரது விவசாய நிலத்தை பாா்வையிட்ட பொழுது அங்கு மண் குவித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததால், மனுவை தள்ளுபடி செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டேன்.

இந்நிலையில், மனோகரன், எனது அலுவலகத்திற்கு வந்து என்னை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், மிரட்டிவிட்டு சென்றாா்.

ஏற்கெனவே, ஸ்ரீவைகுண்டத்தில் கிராம நிா்வாக அலுவலா் கொலை செய்யப்பட்ட நிலையில், எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். மேலும், மிரட்டியவா் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சிவகிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT