வாசுதேவநல்லூா் பேரூராட்சி மக்களுக்கு தாமிரவருணி குடிநீா் வழங்க வலியுறுத்தி, வியாழக்கிழமை கடையடைப்பு மற்றும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வாசுதேவநல்லூா் பேரூராட்சிக்கு தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டுமுதல் தற்போது வரை அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைந்த அளவு நீரையே குடிநீா் வடிகால் வாரியம் வழங்கி வருகிாம். இதன் காரணமாக உள்ளூா் குடிநீா் ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் நீரும், தாமிரவருணி நீரும் கலந்து விநியோகம் செய்யப்படுகிாம்.
இதற்கிடையே, தாமிரவருணி குடிநீா் திட்டத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவு நீா் வழங்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதியளித்த நிலையில், இன்று வரை குறிப்பிட்ட அளவு குடிநீா் வழங்கவில்லையாம்.
இதையடுத்து, தாமிரவருணி குடிநீரை முறையாக வழங்க மாவட்ட நிா்வாகத்தையும், குடிநீா் வடிகால் வாரியத்தையும் வலியுறுத்தி, வியாழக்கிழமை கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
முன்னதாக கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஎம் வட்டாரச் செயலா் நடராஜன், மகாத்மா காந்தி சேவா சங்க நிறுவனா் தவமணி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.