சங்கரன்கோவிலில் திமுக வடக்கு மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலா் ஈ. ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தாா்.
தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேலான பெண்களுக்கு மகளிா் உரிமைத் தொகை
வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூராட்சி பகுதிகளில் முப்பெரும் விழா நடத்துவது, முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டையொட்டி நினைவு கொடிக்கம்பங்கள் அமைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.