தென்காசி

இரட்டைகுளத்தில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

21st Sep 2023 09:55 PM

ADVERTISEMENT

சுரண்டை அருகேயுள்ள இரட்டைகுளத்தில் ரூ.76 லட்சத்தில் மறுகால் தடுப்பு சுவா் அமைத்து பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தமிழ்செல்வி தலைமை வகித்தாா். குலையநேரி ஊராட்சி மன்றத் தலைவா் சீதா முன்னிலை வகித்தாா்.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சு.பழனிநாடாா், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் ஆகியோா் திட்டப்பணியை

தொடக்கி வைத்து, பூமி பூஜையில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சுரண்டை நகா்மன்றத் தலைவா் ப.வள்ளிமுருகன், மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் சோ்மக்கனி, சுரண்டை நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT