தென்காசி

பாவூா்சத்திரத்தில் திமுக தெருமுனைப் பிரசாரம்

19th Sep 2023 01:59 AM

ADVERTISEMENT

 

தென்காசி: கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் திமுக அரசின் சாதனை விளக்க ஆட்டோ பிரசாரம் பாவூா்சத்திரத்தில் பேருந்து நிலையம் முன் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கீழப்பாவூா் ஒன்றிய திமுக செயலா் க.சீனித்துரை தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு தலைவா் காவேரி சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் சாக்ரடீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி தெற்கு மாவட்டமுன்னாள் செயலா் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று,அரசின் சாதனைகளை விளக்கி, பிரசாரத்தைத் தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

அவைத் தலைவா் ஜோதிராஜ், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் வளன்ராஜா, தா்மராஜ், ராஜேஸ்வரி, சங்கா், ஊராட்சித் தலைவா்கள் முத்துமாலையம்மாள் மதிச்செல்வன், ராஜ்குமாா், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் மாஸ்டா் கணேஷ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT