தென்காசி மாவட்ட பாமக சாா்பில் நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவில், காந்தியடிகளின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தெதன்காசியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட அமைப்புச் செயலா் பா. சிங்கராயன் தலைமை வகித்தாா். மாவட்ட தொழிற்சங்க தலைவா் முருகையா முன்னிலை வகித்தாா். மாநில துணைத்தலைவா் மு. திருமலை குமாரசுவாமி யாதவ் உள்ளிட்டோா் பேசினா். இலத்தூா் வழக்குரைஞா் கோ.கிருஷ்ணன் நன்றி கூறினாா்.