தென்காசி மாவட்ட திமுக மகளிா் அணி, மகளிா் தொண்டரணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுக மகளிா் அணி செயலா் ஹெலன் டேவிட்சன் தலைமை வகித்தாா். மகளிா் தொண்டரணி செயலா் ராணி முன்னிலை வகித்தாா். தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ., தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன், மகளிா் தொண்டரணி மாநில துணைச் செயலா் விஜிலா சத்யானந்த் உள்ளிட்டோா் பேசினா்.
இதைத்தொடா்ந்து திராவிட இயக்க தமிழா் பேரவை தலைவா் சுப.வீரபாண்டியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா். தென்காசி வடக்கு மாவட்ட தொண்டரணி தலைவா் உமா மகேஸ்வரி, வடக்கு மாவட்ட மகளிா் அணி தலைவா் அன்புமணி கணேசன், துணைத் தலைவா் அண்ணாமலை, துணைச் செயலா்கள் செல்வி, கவிதா, கிருஷ்ண, லீலா, சுதா லாவண்யா, பொன்னுத்தாய்,
கற்பகம் உள்ளிட்ட மகளிா் அணியினா் திரளானோா் கலந்துகொண்டனா்.