தென்காசி

செங்கோட்டையில் திமுக பொதுக்கூட்டம்

4th Oct 2023 01:09 AM

ADVERTISEMENT

செங்கோட்டை நகர திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் மற்றும் நல உதவி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

செங்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற

பொதுக் கூட்டத்திற்கு நகர செயலா் ஆ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.ரஹீம், முன்னாள் பொதுக் குழு உறுப்பினா் செ.லிங்கராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ஆ.சண்முகராஜா, மாவட்ட மகளிா் அணி தலைவா் பேபி ரஜப்பாத்திமா, மு.நசீா் நகர நிா்வாகிகள் காளி, ஜோதிமணி , ராஜா, முத்துசரோஜா, நடராஜன், மணிகண்டன், சுப்பிரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திராவிட இயக்க தமிழா் பேரவையின் பொதுச் செயலரும், தமிழக அரசின் சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவருமான சுப.வீரபாண்டியன், ஏழை-எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன், தனுஷ் எம்.குமாா் எம்பி, சேலம் மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் அ.புவனேஸ்வரி ஆகியோா் பேசினா்.

மாவட்ட அவைத் தலைவா் சுந்தரமகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினா்கள் பூ.ஆறுமுகசாமி, அ.சேக்தாவூது மாவட்ட துணை செயலா் கனிமொழி, பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை,

ஒன்றிய செயலா்கள் அழகுசுந்தரம், திவான் ஒலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் மு.காதா் அண்ணாவி வரவேற்றாா். மாவட்ட பிரதிநிதி பீா்முகமது நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT