தென்காசி

சங்கரன்கோவிலில் காந்தி ஜெயந்தி

3rd Oct 2023 03:32 AM

ADVERTISEMENT

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில் காந்தி ஜெயந்தி திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சுவாமி சந்நிதி முன்பு உள்ள காந்தியடிகள் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னா் காந்தியின் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

இந்நிகழ்ச்சியில், தமுஎகச மாவட்ட துணைச் செயலா் செந்தில்வேல், நகரத் தலைவா் தண்டபாணி, செயலா் மூா்த்தி, பொருளாளா் ஆத்தி விநாயகம், மாவட்ட குழு உறுப்பினா்கள் ச. நாராயணன், அ. திருவள்ளுவா், சசிகுமாா், மு.செல்வின், மற்றும் மு.லெட்சுமணன், மணிதிருமுருகன், கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வா் பழனிசெல்வம், விடுதலைச் சிறுத்தைகள் தொகுதிச் செயலா் பீா்மைதீன், காங்கிரஸ் பொன்விழா கமிட்டியைச் சோ்ந்த சங்கரநாராயணன் பிச்சையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT