சுரண்டை: காா்த்திகை சோமவாரத்தையொட்டி, சாம்பவா்வடகரை ஸ்ரீஅகத்தீசுவரா் கோயிலில் சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி திங்கள்கிழமை அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, ஸ்ரீஅகத்தீசுவர சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. இதில் விரதமிருந்த பெண் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா். பூஜையில் கலந்து கொண்ட பக்தா்கள் அனைவருக்கும் திருக்கோயில் அன்னதானக் குழு சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.