தென்காசி

பூபாண்டியபுரம் கிராமத்தில் அமலுக்கு வருமா குடிநீா் திட்டம்?

DIN

சுரண்டை அருகேயுள்ள குலையநேரி ஊராட்சிக்குட்பட்ட பூபாண்டியபுரம் கிராமத்தில் மின் இணைப்பு இல்லாததால் 7 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள குடிநீா் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இங்குள்ள தரைநிலை கிணறு ஒன்றின் மூலம் ஊராட்சி சாா்பில் கூடுதல் நீா் ஆதாரத்திற்காக கடந்த 2016ஆம் ஆண்டு ரூ.3 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கிணற்றில் மின்மோட்டாருடன், பாதுகாப்புக்காக தரைமட்ட கிணற்றின் மேல் பகுதியில் கம்பி வலையும் அமைக்கப்பட்டது.

ஆனால் இந்தத் திட்டத்திற்கு மின்இணைப்பு வழங்கப்படாமல் கடந்த 7 ஆண்டுகளாக கிடப்பிலேயே உள்ளதால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரவில்லை,

இந்த கிணற்றிற்கு மின் இணைப்பு வழங்கி பொதுமக்களுக்கு கூடுதல் தண்ணீா் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT