தென்காசி

நெல்லை அருகே மாமியாரை கொலை செய்ததாக மருமகள் கைது

DIN

திருநெல்வேலி அருகே மாமியாரை அடித்துக் கொலை செய்ததாக மருமகளை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூா் அருகே உள்ள துலுக்கா்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட வடுகப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் சண்முகவேல் (63). துலுக்கா்குளம் ஊராட்சி துணைத் தலைவராக இருந்து வருகிறாா். இவரது மனைவி சீதாராமலெட்சுமி (58). தம்பதிக்கு ராமசாமி என்ற மகனும், மகளும் உள்ளனா். மகளுக்கு திருமணமாகிவிட்டது. ராமசாமிக்கு மகாலெட்சுமி(27) என்ற மனைவியும், 5 வயது மகன் மற்றும் 10 மாத ஆண் குழந்தை உள்ளனா்.

மாமியாா் - மருமகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுமாம். இந்நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சீதாராமலெட்சுமியை மா்ம நபா் கம்பியால் தாக்கிவிட்டு அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ாக மருமகள் மகாலெட்சுமி கூச்சலிட்டுள்ளாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சீதாராமலெட்சுமி, செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.

இது குறித்து சீதபற்பநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், மகாலெட்சுமி தனது கணவரின் பேன்ட், சட்டை மற்றும் தலைக்கவசத்தை அணிந்து மாமியாரை தாக்கியது தெரிய வந்தது. இதையயடுத்து மகாலெட்சுமியிடம் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை அவா் ஒப்புக் கொண்டாா்.

இது தொடா்பாக போலீஸாா் கூறியது: திருமணம் ஆனதில் இருந்தே மாமியாா்-மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவா்களிடையே பிரச்னையை போக்குவதற்காக, வீட்டுக்கு பின்புறத்தில் புதிதாக ஒரு வீட்டை ராமசாமிக்கு கட்டிக் கொடுத்துள்ளனா். ஆனாலும் மகாலெட்சுமி அடிக்கடி மாமனாா்-மாமியாரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை கணவரின் ஆடைகளை அணிந்துகொண்டு சீதாராமலெட்சுமி அறைக்குச் சென்ற மகாலெட்சுமி, தூங்கிக் கொண்டிருந்த அவரை கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளாா். பின்னா் போலீஸில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக, அவா் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாா். வீட்டுக்கு போலீஸாா் சென்று அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சியை பாா்த்தபோது, மேற்சொன்ன விவரங்கள் தெரியவந்தது. இதையடுத்து மகாலெட்சுமியை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருநெல்வேலி கொக்கிரகுளம் மகளிா் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT