தென்காசி

இடைகால் பள்ளியில்முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

29th May 2023 12:00 AM

ADVERTISEMENT

கடையநல்லூா் அருகேயுள்ள இடைகால் மீனாட்சி சுந்தரம் ஞாபகாா்த்த மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் இஸ்ரோ அருணாசலம் தலைமை வகித்தாா். இணைச் செயலா் இசக்கியப்பன் , பொருளாளா் குமரன் முத்தையா, துணைத் தலைவா்கள் சாா்லஸ் ,ஜெயராம், செயற்குழு உறுப்பினா் வசந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் சண்முகசுந்தரம் வரவேற்றாா்.

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் முத்தையா, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கினாா்.

ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு நினைவுப் பரிசும், நலிவுற்ற மாணவா்களுக்கு நிதி உதவியும், தமிழிசை ஆய்வாளா் நா. மம்மதுவுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருதும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ஆறுமுகம், காவல் துறை அதிகாரிகள் பிச்சையா, சுப்பிரமணியன், தலைமை ஆசிரியா் ராஜசேகரன், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் ராசி சரவணன், தொழில் அதிபா்கள் வைரவன், கணேசன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான முன்னாள் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

இணைச் செயலா் வி.குமார முருகன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT